Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"போட்டித் தேர்வுக்கு படிக்கும் மாணவர்களிடம் கேள்வி கேட்கட்டும்" - #StateSyllabus குறித்து விமர்சித்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதில்!

01:28 PM Sep 02, 2024 IST | Web Editor
Advertisement

ஆளுநர் போட்டித் தேர்வுக்கு படிக்கும் மாணவர்களிடம் கேள்வி கேட்கட்டும் என பள்ளிகல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

Advertisement

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆய்வக உதவியாளருக்கான பயிற்சி சான்றிதழ் மற்றும் பயிற்சி கட்டகம் வெளியீட்டு விழா திருச்சி தேசிய கல்லூரி பள்ளி மைதானத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறையிலுள்ள ஆய்வக உதவியாளர் பணியிடத்தில் பணிபுரியும் 4786 ஆய்வக உதவியாளர்களுக்கு ஏப்ரல் மற்றும் மே 2024 இல் பணியிடைபயிற்சி நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற 3020 ஆய்வக உதவியாளர்களுக்கு
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கலந்து கொண்டு ஆய்வக உதவியாளர்களுக்கான பயிற்சி சான்றிதழ் வழங்கி பயிற்சி கட்டகத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்வில் பள்ளி கல்வி இயக்குனர்(கூடுதல் பொறுப்பு) முனைவர் பழனிச்சாமி, பள்ளிக்கல்வித்துறை அரசு செயலாளர் மதுமதி, தொழில் கல்வித்துறை இணை இயக்குனர் முனைவர் ஜெயக்குமார், திருச்சி பெரம்பலூர் கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆய்வக உதவியாளர்கள் 2000க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

இதையும் படியுங்கள் : WaqfAmendmentBill க்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் – அசாதுத்தீன் ஒவைஸி அழைப்பு!

"ஒருங்கிணைந்த கல்வி மூலமாக மத்திய அரசு நிதி வழங்கிக் கொண்டு வருகிறது. இந்த ஆண்டு ரூ.2153 கோடி நிதியை வழங்கவில்லை. இதனால் மாணவர்களின் கல்வி மற்றும் ஆசிரியர்களின் சம்பளம் உள்ளிட்டவை பாதிக்கப்படும். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக மத்திய அமைச்சரை 2 முறை சந்தித்து கருத்துகளை தெரிவித்தோம். மீண்டும் நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பின்பு சந்தித்து நிதி வரவில்லை என கூறினோம். நீங்கள் தேசிய கல்விக் கொள்கையில் கையெழுத்துட்டால் அரை மணி நேரத்தில் நிதி ஒதுக்குவதாக தெரிவித்தார்.

நாங்கள் 3 , 5 , 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு, மும்மொழி கொள்கை , குலக்கல்வி திட்டம் மறைமுகமாக கொண்டு வருவதன் பாதகங்களை கூறியும் நீங்கள் யோசித்துக் கூறுங்கள் என சொல்லிவிட்டார். இதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். அவர் என்ன கூறுகிறாரோ அதை சார்ந்து எங்கள் நடவடிக்கை இருக்கும்.

ஆளுநர் மாநில பாடம் திட்டம் குறித்து கூறிய கேள்விக்கு ?

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகளுக்கு படிக்கும் தேர்வர்கள் ஆறாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாநில பாடப் புத்தகத்தில் இருந்து தான் படிக்கின்றனர். யுபிஎஸ்சி தேர்வர்களும் மாநில பாட புத்தகத்தில் தான் படிக்கின்றனர். வேண்டுமென்றால் ஆளுநரை அழைத்துச் செல்கிறேன். அங்கு போட்டித் தேர்வுக்கு படிக்கும் மாணவர்களிடம் அவரை கேள்வி கேட்கட்டும்."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
Anbil MaheshGovernorMinister Anbil Mahesh PoiyyamozhiR.N raviState Syllabustirchy
Advertisement
Next Article