உளுந்தூர்பேட்டை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட வெளி மாநில கொள்ளையர்கள் கைது!
உளுந்தூர்பேட்டை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட வெளி மாநில கொள்ளையர்கள்
4 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செம்பியம்மாதேவி
வனப்பகுதி அருகே ஆந்திராவில் இருந்து மாடுகளை ஏற்றிக்கொண்டு பொள்ளாச்சி நோக்கி சென்றது. இந்நிலையில், லாரியை பின் தொடர்ந்து காரில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் லாரியை முந்தி சென்று திடீரென மடக்கி நிறுத்தியுள்ளனர்.
இதனால், பதற்றம் அடைந்த ஓட்டுநர்கள் ராஜேஷ், நூர் முகமது ஆகியோர் லாரியை நிறுத்தியுள்ளார். லாரி நின்றவுடன் காரில் இருந்து இறங்கிய 8 பேர் கொண்ட கும்பல்
லாரி ஓட்டுநர் நூர் முகமது மற்றும் அவருடன் வந்த மற்றொரு ஓட்டுநர் ராஜேஷ் ஆகிய
இருவரையும் இரும்பு கம்பிகளை கொண்டும், கத்தியை காட்டியும் மிரட்டி உள்ளனர். மேலும், அவர்களின் செல்போன்களை பிடுங்கிக் கொண்டு கடுமையாக தாக்கி கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.
இதையும் படியுங்கள் : அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி வழக்கில் திடீர் திருப்பம்!
இதனையடுத்து, கொள்ளையர்களின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் லாரி ஓட்டுநர்கள் கூச்சலிடதால், செம்பியம்மாதேவி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஓடி வந்து கொள்ளையர்களை மடக்கி பிடிக்க முயன்ற போது நான்கு பேர் தப்பி ஓடிவிட்டனர்.
பொதுமக்களின் பிடியில் இருந்த நான்கு பேரை கிராம மக்கள் எலவனாசூர்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்து, தப்பி ஓடிய குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். விசாரணையில்,கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்கள் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.