For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“ஆணவக்கொலை தடுப்பு சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும்!” - விசிக தலைவர் #Tirumavalavan பேட்டி!

09:55 PM Aug 21, 2024 IST | Web Editor
“ஆணவக்கொலை தடுப்பு சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும் ”   விசிக தலைவர்  tirumavalavan பேட்டி
Advertisement

ஆணவக்கொலை தடுப்பு சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Advertisement

விசிக தலைவர் திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு ராயப்பேட்டை ஜி.பி.சாலை, உட்ஸ் சாலை சந்திப்பில் 62 அடி விசிக கொடிகம்பத்தில் கட்சிக்கொடியினை ஏற்றி வைத்து கல்வெட்டினையும் விசிக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து மேடையில் விசிக தலைவர்
திருமாவளவன் பேசினார்.

அப்போது பேசிய அவர் கூறியதாவது :

"அக்டோபர் 2 ஆம் தேதி மகளிர் மாநாடு ஒன்றை நடத்த உள்ளோம். அதனை தொடர்ந்து மறுசீரமைப்பு செய்யவுள்ளோம். பல முனைகளிலிருந்து நம் மீது விமர்சனங்களை அள்ளி தெளிக்கிறார்கள்.  விசிக குறித்து தவறான தகவலை பரப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் இல்லாத விமர்சனங்களை சமூக வலைதளங்களில் பேசுகிறார்கள்.

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய வகையிலுள்ள உள்ளது.  தமிழர் எழுச்சி நாள் ஆகஸ்ட் 17ம் தேதி தென் மாநிலங்களில் கொண்டப்பட்டடுள்ளது. ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா என இவையெல்லாம் நம் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு சான்று விசிக சாதியினை முன்நிறுத்தி அரசியல் செய்யவில்லை.

இங்குள்ள சூழலை கருத்தில் கொண்டு நான் தலித் முதலமைச்சர் ஆகமுடியாது என்று சொன்னேன். அது தமிழ்நாட்டை அல்ல தேசிய அளவில் சொன்னேன். இதனை நேர்மறையாகவும் எதிர்மறையும் விமர்சனங்கள் செய்கிறார்கள். இதனை திமுகவை மனதில் வைத்து சொன்னதாக தேவைவற்றை சொல்கிறார்கள். இவற்றை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல் பணியினை மேற்கொள்ளுங்கள்"

இவ்வாறு அவர் மேடையில் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள் : “தொழில் தொடங்க சிறந்த மாநிலம் தமிழ்நாடுதான்!” | #SaintGobainCEO சந்தானம் கருத்து

இதனைத் தொடர்ந்து, விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் தெரிவித்ததாவது :

"கொல்காத்தாவில் மருத்துவ மாணவிக்கு நடந்த கொடூரம் பாலியல் கொடுமை நாட்டையே
உலுக்குகிறது. உச்சநீதிமன்றம் அதனை வன்மையாக கண்டித்துள்ளது. நிர்பயா வழக்கிற்கு பிறகு அவர் பெயரிலேயே சட்டம் இயற்றியும் கூட மீண்டும்,மீண்டும் அதே வன்கொடுமை அரங்கேறுகிறது. சுதந்திர தினவிழாவில் பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசியுள்ளார் பிரதமர், அதனை உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

இதையும் படியுங்கள் : “தொழில் தொடங்க சிறந்த மாநிலம் தமிழ்நாடுதான்!” | #SaintGobainCEO சந்தானம் கருத்து

சோளிங்கர் அருகில் ஆணவக்கொலை இளைஞர் கிணற்றில் கொன்று வீசப்பட்டுள்ளார். அவரின் கொலைக்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட வேண்டும். ஆணவக்கொலை தடுப்பு சட்டத்தை மாநில அரசே ஏற்படுத்த முடியும் மேலும் அதனை இயற்ற
வேண்டும்.  ஆகஸ்ட் 17 அன்று தமிழர் எழுச்சி நாள் அன்று கொடிகம்பங்கள் அகற்றப்பட்டுள்ளது. இன்று நாகப்பட்டினம் அருகே தாசில்தார் கொடிக்கம்பத்தை அவரே அகற்றியுள்ளார்.

விசிக கொடியினை அகற்றுவதையே வேலையாக வைத்துள்ளார்கள். இது தமிழ்நாடு அரசிற்கு அவப்பெயர் ஏற்படுத்தும். விசிக விவகாரங்களில் வருவாய்த்துறை தலையீடுகிறார்கள். இதனை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்வோம். அதிகார வர்கத்தினர் எங்களுக்கு எப்போதும் தொல்லை தருகிறார்கள்.அதிகாரிகள் சில இடங்களில் தனிப்பட்ட முறையில் நெருக்கடி தருகிறார்கள்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
Advertisement