For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பிப்.26 முதல் ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ பரப்புரை தொடக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

01:18 PM Feb 23, 2024 IST | Jeni
பிப் 26 முதல் ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ பரப்புரை தொடக்கம்   முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பு
Advertisement

பிப்.26-ம் தேதி முதல் ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற பரப்புரை தொடங்கப்படும் என்று திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement

நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக திமுக மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், தொகுதி பார்வையாளர்களுடன் அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். திமுக அமைச்சர்கள், 72 மாவட்ட செயலாளர்கள், 234 தொகுதி பார்வையாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தேர்தல் பணிகள் மிகவும் வேகமாக நடந்து வருகிறது. 4000-க்கும் அதிகமான கோரிக்கைகள் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவுக்கு வந்துள்ளது. பிப்.26-ம் தேதி முதல் ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் வீடுவீடாகச் செல்லும் பரப்புரை தொடங்கப்படுகிறது. இந்த பரப்புரையின் மூலம் பாஜக அரசு இழைக்கும் அநீதிகள், திமுக அரசின் சாதனைகள், பட்ஜெட் அம்சங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அடிமட்டத் தொண்டர் வரையிலான அனைத்து விவரங்களும் தலைமைக்குத் தெரியும். தேர்தலுக்குப் பிறகு பல மாற்றங்களை கட்சியிலும், அரசிலும் எதிர்பார்க்கலாம்” என்று தெரிவித்தார்.

இதையும் படியுங்கள் : பழனிவேல் தியாகராஜனை ஐடி துறைக்கு மாற்றியது ஏன்? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!

பின்னர் இக்கூட்டத்தில், முதலமைச்சரின் பிறந்தநாள் கூட்டத்தை பிரம்மாண்டமாக நடத்த வேண்டும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கோரிக்கை வைத்த நிலையில், கூட்டம் நடத்த வேண்டாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தீர்மானங்களை வாசித்தார்.  ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டங்களை நடத்திய திமுக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தல், ‘இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற தேர்தல் பரப்புரையை தொடங்குதல், திமுக தலைவர் பிறந்தநாள் மற்றும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்துதல் தொடர்பான 3 தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேறின.

Tags :
Advertisement