For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“ஸ்டாலின் என்றால் செயல்...”: திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் நிறைவு - காணொளி வெளியீடு!

07:57 AM May 07, 2024 IST | Web Editor
“ஸ்டாலின் என்றால் செயல்   ”  திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் நிறைவு   காணொளி வெளியீடு
Advertisement

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்து இன்றோடு 3 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisement

கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அமோக வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சியில் அமர்ந்தது. அந்த ஆண்டு மே 7-ம் தேதி முதல் முறையாக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். இன்றோடு (மே 7) திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் நிறைவடைகிறது.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த காணொளி திமுக அரசின் 3 ஆண்டுகள் சாதனையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில்,

“இது சொல்லாட்சி அல்ல; செயலாட்சி! மக்களின் நன்றி கலந்த வாழ்த்தும், புன்னகை அரும்பும் முகங்களும்தான் இன்னும் இன்னும் உழைக்கத் தூண்டுகிறது! நம்பிக்கையோடு முன்செல்கிறேன்... பெருமையோடு சொல்கிறேன்... "தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு!””

என பதிவிட்டுள்ளார்.

Tags :
Advertisement