”தமிழ்நாடு என்ற தேரை அசைய விடாமல் செய்துவிட்டார் ஸ்டாலின்” - விஜய் விமர்சனம்!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழ் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் இன்று அவர் நாகப்பட்டினம் மாவட்டத்தை தொடர்ந்து திருவாரில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், "நீண்ட நாள் ஓடாமல் இருந்த திரூவாரூர் தேரை ஓட வைத்தது நான் தான் என மார்தட்டி கொண்டவர் கலைஞர். ஆனால், அவரின் மகன் முதல்வர் மு.க. ஸ்டாலின், நன்றாக ஓட வேண்டிய தமிழ்நாடு என்ற தேரை நான்கு முனையிலும் கட்டையை வைத்து அசைய விடாமல் செய்துவிட்டார்.
திருவாரூரில் உள்ள நெல் கொள்முதல் மையங்களில் மூட்டைகளை ஏற்றி, இறக்க ரூ.40 கமிஷன் வாங்குகிறார்கள். முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு 40/40 என்பது தேர்தல் முடிவாக இருக்கலாம். ஆனால், டெல்டா விவசாயிகளுக்கு 40/40 என்பது அவர்கள் வயித்துல அடிச்சு அவர் வாங்கின கமிஷன் தான்.
உங்களுடன் ஸ்டாலின்' என உங்க குடும்பத்துக்கு மட்டும் தான் சொல்லிக்க வேண்டும்.அதை நீங்கள் மக்களிடம் சொல்லவே முடியாது.நீங்கள் மக்களுடன்
இல்லை.
மறைந்த முதல்வர் கருணாநிதிக்கு பேனா சிலை வைக்க வேண்டும் என சொல்றீங்க. எல்லா இடத்திற்கும் உங்க அப்பா பெயரை வைக்கிறீங்க; ஆனால், அவர் பிறந்த இந்த மாவட்டத்தில் அடிப்படை வசதி கூட சரியாக இல்லை” என்றார்.