For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சுதந்திர தினத்தன்று விண்ணில் பாய்கிறது எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட்!

10:04 AM Aug 08, 2024 IST | Web Editor
சுதந்திர தினத்தன்று விண்ணில் பாய்கிறது எஸ்எஸ்எல்வி டி 3 ராக்கெட்
Advertisement

புவிக் கண்காணிப்புக்காக இஓஎஸ்-08 செயற்கைக்கோளுடன் எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் ஆக.15-ஆம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது.

Advertisement

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ , புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக அதிநவீன இஒஎஸ்-08 எனும் செயற்கைக் கோளை வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோள் சிறியரக எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஆகஸ்ட் 15-ம் தேதி காலை 9.17 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது.

சுமார் 175 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோளின் ஜிஎன்எஸ்எஸ்-ஆர் கருவி கடல் மேற்பரப்பு காற்றின் செயல்பாடு, மண்ணின் ஈரப்பதம் மதிப்பீடு, நீர்நிலைகளை கண்டறிதல் போன்ற பணிகளுக்கு பயன்படும். இது மனிதர்களை விண்ணுக்கும் அனுப்பும் ககன்யான் திட்ட விண்கலத்திலும் இடம் பெற உள்ளது. இது சிறிய செயற்கைக்கோள் ஏவுகணை வரிசையில் கடைசி ஏவுகணை இது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement