சர்வதேச கிரிக்கெட்டில் சாதனை படைத்த இலங்கை வீரர்! 1,135 ரன்கள் அடித்து #PathumNisanka முதலிடம்!
சர்வதேச கிரிக்கெட்டில் இந்தாண்டு அதிக ரன்கள் அடித்தவர் பட்டியலில் இலங்கை வீரர் பதும் நிசங்கா முதலிடம் பிடித்துள்ளார்.
இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை அணி 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. முதல் இரு போட்டிகளிலும் இலங்கை தோல்வியடைந்து தொடரை இழந்தது. இந்நிலையில் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 325 ரன்களும், இலங்கை 263 ரன்களும் எடுத்தன.
2-வது இன்னிங்ஸில் இங்கிலாந்து 156 ரன்களுக்கு சுருண்ட நிலையில், 2 விக்கெட்களை மட்டுமே இழந்து இலக்கை விரட்டி இலங்கை வெற்றி பெற்றது. இலங்கையின் தொடக்க வீரர் பதும் நிசங்கா ஆட்டமிழக்காமல் 127 ரன்கள் சேர்த்தார். இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் காரணமாக கடந்த 10 ஆண்டுகளில், இங்கிலாந்துக்கு எதிராக அவர்களது சொந்த மண்ணில் இலங்கை பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.
இதையும் படியுங்கள் :முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு | சி.டி.ஆர்.நிர்மல்குமாரின் மனுவை தள்ளுபடி செய்தது #MadrasHighCourt!
இந்த போட்டியில் வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்த பதும் நிசாங்கா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, நடப்பு ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர் பட்டியலில் இலங்கை வீரர் பதும் நிசங்சா 1,135 ரன்கள் அடித்து முதலிடம் பிடித்துள்ளார்.
பதும் நிசங்கா - 1,135 ரன்கள் ( 25 இன்னிங்ஸ்)
கமிந்து மெண்டிஸ் - 1,111 ரன்கள் (36 இன்னிங்ஸ்)
ஜெய்ஸ்வால் - 1,033 ( 19 இன்னிங்ஸ்)
ரோஹித் சர்மா - 990 ரன்கள் ( 25 இன்னிங்ஸ்)
ஜோ ரூட் - 986 ரன்கள் (20 இன்னிங்ஸ்)