வெளியான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் | பின்னடவை சந்திக்கும் #NewZealand அணி!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்த நிலையில், நியூசிலாந்து அணி புள்ளிபட்டியலில் 7வது இடத்திற்கு சரிந்துள்ளது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நியூசிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்தை 63 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை அணி 1-0 என முன்னிலை பெற்றது. இந்நிலையில், இலங்கை - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 154 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியது.
இதையும் படியுங்கள் : Maharashtra -வில் 3 ஆண்டுகளாக 11 பேரைக் கொன்ற புலி | போராடிப் பிடித்த வனத்துறை!
இலங்கை அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றிய பின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் புதிய புள்ளிப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) வெளியிட்டுள்ளது. இதில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரை கைப்பற்றிய இலங்கை அணி (55.56 சதவீதம்) 3வது இடத்தில் தொடர்கிறது. தொடரில் தோல்வியடைந்த நியூசிலாந்து அணி (37.50 சதவீதம்) 4வது இடத்தில் இருந்து 7வது இடத்திற்கு சரிந்துள்ளது.
இந்தப்பட்டியலில் முதல் இரு இடங்களில் இந்தியா (71.67 சதவீதம்), ஆஸ்திரேலியா (62.50 சதவீதம்) அணிகள் உள்ளன. 3வது இடத்தில் அணி (55.56 சதவீதம்), 4வது இடத்தில் இங்கிலாந்தும் (42.19 சதவீதம்), 5வது இடத்தில் வங்காளதேசமும் (39.29 சதவீதம்), 6வது இடத்தில் தென் ஆப்பிரிக்காவும் (38.89 சதவீதம்) உள்ளன. மேலும், 7வது இடத்தில் நியூசிலாந்து அணி (37.50 சதவீதம்), 8 மற்றும் 9வது இடங்களில் முறையே பாகிஸ்தான் (19.05 சதவீதம்), வெஸ்ட் இண்டீஸ் (18.52 சதவீதம்) அணிகள் உள்ளன.