For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஸ்ரீகாக்குளம் to திருப்பதி... ஹெலிகாப்டர் மற்றும் விமானம் மூலம் பறந்து வந்த இதயம்!

04:13 PM Dec 20, 2023 IST | Web Editor
ஸ்ரீகாக்குளம் to திருப்பதி    ஹெலிகாப்டர் மற்றும் விமானம் மூலம் பறந்து வந்த இதயம்
Advertisement

தெலங்கானாவை சேர்ந்த சிறுமிக்கு இதயமாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காக ஸ்ரீகாக்குளத்திலிருந்து திருப்பதிக்கு ஹெலிகாப்டர், விமானம் மூலம் இதயம் கொண்டு வரப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தெலங்கானா மாநிலம் வனஸ்தலிபுரத்தை சேர்ந்த 11 வயது சிறுமி லகரி என்பவர் இதய பாதிப்பு காரணமாக திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்தின் பத்மாவதி குழந்தைகள் நல மருத்துவமனையில் கடந்த 6-ம் தேதி முதல் சிகிச்சை பெற்று வந்தார்.  சிறுமி லகரிக்கு இதயமாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் பரிந்துரை செய்திருந்தனர்.

எனவே சிறுமியின் பெற்றோர் ஆந்திர அரசின் ஜீவன் தான் திட்டத்தின் மூலம் இதயமாற்று அறுவை சிகிச்சை செய்ய இதயத்திற்காக தங்கள் மகளின் பெயரை பதிவு செய்து வைத்திருந்தனர்.

இதையும் படியுங்கள்:  ‘தென்மாவட்டங்களில் பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம்

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் மாவட்டத்தில் உள்ள ராவி வலசை கிராமத்தை சேர்ந்தவர்
ராஜேஸ்வர ராவ் (50).  அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நிலை பாதிப்பு
காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூளை சாவு அடைந்தார்.  எனவே அவருடைய உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்ப உறுப்பினர்கள் முன்
வந்திருந்தனர்.

இந்த நிலையில் ஸ்ரீகாக்குளம் தனியார் மருத்துவமனையில் மூளை சாவு அடைந்த ராஜேஸ்வராவ் இதயத்தை சிறுமி லகரிக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது.  இதனை தொடர்ந்து ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவின் பேரில்
ஸ்ரீகாக்குளத்தில் இருந்து ராஜேஸ்வர்ராவின் இதயம் ஹெலிகாப்டர் மூலம்
விசாகப்பட்டினம் விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.  தொடர்ந்து அங்கிருந்து விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து அந்த இதயம் ஆம்புலன்ஸ் திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்தின் ஸ்ரீ பத்மாவதி குழந்தைகள் இதய நல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.  டாக்டர்கள் அந்த இதயத்தை அறுவை சிகிச்சை செய்து லகரிக்கு வெற்றிகரமாக பொருத்தினர்.  ஓராண்டு காலத்தில் பத்மாவதி குழந்தைகள் நல மருத்துவமனையில் இதுவரை 10 பேருக்கு இதயமாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement