For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஸ்ரீமுளைத்தார் முத்துமாரியம்மன் கோயிலில் 50 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா

10:33 AM Nov 20, 2023 IST | Student Reporter
ஸ்ரீமுளைத்தார் முத்துமாரியம்மன் கோயிலில் 50 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா
Advertisement

புதுக்கோட்டை மாவட்டம் ஸ்ரீமுளைத்தார் முத்துமாரியம்மன் கோயில்  50 வருடங்களுக்குப் பிறகு குடமுழுக்கு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.  இதில் ஏராளமான பக்தர்கள்  தரிசனம் செய்தனர்.

Advertisement

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே குளத்தூர்நாடு பருக்கை
விடுதியில்  ஸ்ரீமுளைத்தார் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது.  இக்கோயிலின் கும்பாபிஷேக விழா 50 ஆண்டுகளுக்குப் பிறகு வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

அதனை தொடர்ந்து, ஸ்ரீமுளைத்தார் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 3 நாட்களுக்கு முன்னதாக யாகசாலைகள் அமைக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

இதையும் படியுங்கள்:திருவண்ணாமலை தீபத் திருவிழா இரண்டாம் நாள்; வெள்ளி விமானங்களில் எழுந்தருளிய பஞ்ச மூர்த்திகள்!!

மேலும், யானை, குதிரைகள் கோயிலை சுற்றி வலம் வர சிவாச்சாரியார்கள் செண்டை மேளம் முழங்க புனித நீர் நிரம்பிய குடங்களை தலையில் சுமந்தவாறு கோயிலை சுற்றி வலம் வந்தனர். பின்னர், கருட பகவான் வானில் வட்டமிட புனித நீரானது கோபுர கலசத்தில் மேல் ஊற்றப்பட்டு, பக்தர்கள் மேல் தெளிக்கப்பட்டது.

இந்த விழாவில் பருக்கை விடுதி, நடுப்பட்டி,நாயக்கர்பட்டி, உலவயல், மேலப்பட்டி கீழப்பட்டி பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் நிர்வாகத்தினர் மற்றும் குளத்தூர் நாடு பொது மக்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். 

Tags :
Advertisement