இலங்கை தமிழர்கள் இந்தியாவில் சட்டப்பூர்வமாக தங்கலாம் - மத்திய அரசு!
இலங்கையில் நடந்த உள்நாட்டு போர் காரணமாகவும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாகவும் இலங்கை தமிழர்கள் பலர் உலக நாடுகளில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர் பல்வேறு நாடுகள் அவர்களுக்கு குடியுரிமையும் வழங்கியுள்ளது. இந்தியாவில் தமிழ் நாட்டிலும் பல முகாம்களில் இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு குடியுரிமை வழங்கவேண்டும் என்று தமிழகத்தில் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இயற்றப்பட்ட குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டம் 2025ன் படி, இந்தியாவிற்குள் பாஸ்போர்ட் அல்லது செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லாமல் வெளிநாட்டினரின் நுழைந்தாலோ அல்லது தங்கினாலோ அந்நபருக்கு ரூ. 5 லட்சம் அபராதம் அல்லது ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தது.
இந்த நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகமானது, 2015 ஜன.9ம் தேதிக்கு முன்பு உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் நுழைந்து, அரசிடம் அகதிகளாக பதிவு செய்த இலங்கைத் தமிழர்கள், சட்டப் பூர்வமாக தங்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.. மேலும் சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் உள்ள தண்டனை விதிகளில் இருந்தும் இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய அரசு விலக்கு அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.