தமிழக மீனவர்கள் 35 பேரை கைது செய்த இலங்கை கடற்படை!
தமிழக மீனவர்கள் 35 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
07:53 AM Nov 03, 2025 IST
|
Web Editor
Advertisement
தமிழகம் மற்றும் புதுச்சேரி மீன்பிடி துறைமுகங்களில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஒரு நாட்டுப் படகு, மூன்று விசைப்படகு உள்ளிட்ட 35 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
Advertisement
விசாரணைக்கு பின் மீனவர்கள் 35 பேரும் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்படுவார்கள் என இலங்கை கடற்படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் கைது செய்யப்பட்ட மீனவர்கள் நாகை, காரைக்கால் பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என யாழ்பாணம் மீன்வளத்துறை அதிகரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Article