Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

37 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை - மீட்டுத்தரவில்லை எனில், தர்ணாவில் ஈடுபடப்போவதாக காங். எம்.பி. சுதா மத்திய அரசுக்கு கடிதம்!

01:37 PM Sep 22, 2024 IST | Web Editor
Advertisement

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மயிலாடுதுறையை சேர்ந்த 37 மீனவர்களை மீட்டுத்தருமாறு அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுதா, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Advertisement

அக்கடிதத்தை இணைத்து மயிலாடுதுறை எம்.பி. சுதா தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

“தமிழ்நாட்டில் எனது தொகுதியான மயிலாடுதுறைக்கு உட்பட்ட பூம்புகார், சந்திரபாடி, வானகிரி, சின்னமேடு, மடத்துக்குப்பம் ஆகிய மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் 37 பேர் கைது செய்யப்பட்டிருப்பது இலங்கை கடற்படையின் அரக்கத்தனமான அட்டூழியமாகும். கிழக்குக் கடற்கரையின் இந்தப் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் மிகவும் அமைதியை விரும்புபவர்கள். அவர்கள் இலங்கை கடற்பரப்பில் ஒருபோதும் நுழைய மாட்டார்கள்.

கடந்த வியாழன் (செப். 19) அன்று, படகு கவிழ்ந்து இறந்த இரண்டு இலங்கை மீனவர்களின் உடல்களை மீட்க மூன்று படகுகளில் இருந்த 43 இந்திய மீனவர்கள் இலங்கைக்கு உதவினர். இந்த நல்ல உதவிக்கான விலை 37 மீனவர்களின் கைது மற்றும் அவர்களின் படகுகள் தடுப்புக்காவலில். மீதமுள்ள மீனவர்கள் ஆறு பேர் ஒரே படகைப் பயன்படுத்தி தப்பியுள்ளனர். அவர்களின் கதைகள் இதயத்தை உடைக்கிறது.

எங்கள் மீனவர்களையும் அவர்களது படகுகளையும் 48 மணி நேரத்தில் பத்திரமாக மீட்டுத் தருமாறு பிரதமர், வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோரிடம் கேட்டுக் கொள்கிறேன். இல்லை என்றால் காந்திய வழியை பின்பற்றி சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரக அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபடுவேன். கைது செய்யப்பட்ட மீனவர்களின் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் நான் இருப்பேன். எனது மீனவர் சகோதரர்களுக்கு நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags :
ArrestExternal Affairs MinisterFishermanJaishankarMayiladuthuraiNews7Tamilsrilanka navy
Advertisement
Next Article