ஸ்ரீ கொப்புடைய அம்மன் கோயில் தெப்ப திருவிழா கோலாகலம்!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைந்துள்ள 200 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஸ்ரீ கொப்புடைய அம்மன் கோவில் ஊர் காவல் தெய்வமாக விளங்கி வருகிறது. இந்தக் கோவிலின் சிறப்பு மூலவரே உற்சவர் ஆக திருவீதி ஊடாகில் எழுந்தருளில் பக்தர்களுக்கு அருள் புரிந்து வருகிறார். இந்த கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் 10 நாள் திருவிழா கொண்டாடப்படுகிறது.
இதன் முதல் நிகழ்வாக கடந்த 11.5.25 செவ்வாய்க்கிழமை அன்று காப்பு கட்டுதளுடன் விழா தொடங்கியது. இதைய அடுத்து தினந்தோறும் அம்பாள் காலை மாலை இருவேளைகளிலும் பல்வேறு அலங்காரங்களில் பல்வேறு வாகனங்களிலும் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.
இதனிடையே எட்டாம் நாள் திருவிழாவன செவ்வாய்க்கிழமை அன்று அம்மன் திருந்தேரில் எழுந்தருளி தேரோட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று பத்தாம் நாள் திருவிழாவாக தெப்ப திருவிழா நடைபெற்றது.
இரவு 10:30 மணி அளவில் அம்பாள் ஊஞ்சலில் சர்வ அலங்காரங்களுடன் சிறப்பு பூஜைகள் தீபாராதனை செய்யப்பட்டு கோவிலுக்கு எதிரே உள்ள திருக்குளத்தில் மின்விளக்குகளாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி திருக்குளத்தை மூன்று முறை வளம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து மீண்டும் சன்னதி திரும்பியது. இந்த தெப்பத் திருவிழாவை காண்பதற்காக சுற்றுப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர்.