ஶ்ரீ திரௌபதி அம்மன் ஆலய அக்னி வசந்த விழா! - ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து சாமி தரிசனம்!
ஆரணி கீழ்நகர் கிராமத்தில் அமைந்துள்ள ஶ்ரீ திரௌபதி அம்மன் ஆலய
அக்னி வசந்த விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து அம்மனை தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கீழ்நகர் கிராமத்தில் அமைந்துள்ள ஶ்ரீ திரௌபதி அம்மன் ஆலய அக்னி வசந்த விழா மார்ச் 10 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, தினமும் மாலையில் மகாபாரத சொற்பொழிவு மற்றும் மகாபாரத தெருக்கூத்து நாடக கலைஞர்களால் தெருக்கூத்து நாடகங்கள் நடந்து வந்தன.
இதையும் படியுங்கள் : தமிழ்நாட்டில் 7 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டண உயர்வு அமல்!
மகாபாரதத்தில் துரியோதனனை பீமன் வதம் செய்து பாஞ்சாலி அம்மன் சபதத்தை
நிறைவேற்றிவிட்டு மாலையில் அம்மனுக்கு காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள்
தீமிதி திருவிழா நடைபெற்றது.
இந்நிலையில், ஆலயம் முன்பு குவித்து வைத்திருந்த நெருப்பு அக்னி குண்டத்தில் அம்மன் பூ கரக ஊர்வலத்துடன் சென்று தீ மிதித்து தன்னுடைய விரதத்தை நிறைவேற்றியவுடன் அதனை தொடர்ந்து பக்தர்களும் தீ மிதித்து பாஞ்சாலி அம்மனை வணங்கி தங்களுடைய விரதத்தை நிறைவு செய்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் கீழ்நகர் கிராமம் மற்றும் அதன் சுற்றி உள்ள பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோலிலுக்கு சென்று கலந்து கொண்டு தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்திவிட்டு, பாஞ்சாலி அம்மனை வழிபாடு செய்தனர்.