SRHvsRR | இமாலய இலக்கை சேஸிங் செய்த ராஜஸ்தான் அணி போராடி தோல்வி!
18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நேற்று(மார்ச்.22) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கோலாகலமாக கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய நிலையில், இன்று(மார்ச். 23) ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா களமிறங்கினர். பவர் பிளேவில் அதிரடியாக இருவரும் விளையாடி வந்த நிலையில், அபிஷேக் சர்மா 24 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய நிதிஸ் குமார் ரெட்டி 30 ரன்களில் வெளியேறினார். இதற்கிடையில் அதிரடியாக விளையாடிய ஹெட் அரைசதம் கடந்து 67 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டகாரர்களாக சஞ்சு சாம்சன் ஆகியோர் இதில் களமிறங்கினர்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் 1 ரன்னில் அவுட்டாக, பொறுப்பாக விளையாடிய கேப்டன் சஞ்சு 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனிடையே ரியான் பராக், நிதிஷ் ராணா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அதன் பின்பு களமிறங்கிய துருவ் ஜூரல் அதிரடியாக தனி ஆளாக போராடினார். இருப்பினும் அவர் 70 ரன்களில் முகமது ஷமியிடம் தனது விக்கெட்டை இழந்தார். அதன் பிறகு இணைந்த ஹெட்மியர் 42 ரன்களும் சுபம் துபே 34* ரன்கள் அடித்தனர். 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 266 ரன்களுடன் 6 விக்கெட்டுகளை இழந்து ஹைதராபாத் அணியிடம் போராடி தோல்வியடைந்தது.