For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#SRHvsMI - டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சு தேர்வு!

07:54 PM May 06, 2024 IST | Web Editor
 srhvsmi   டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சு தேர்வு
Advertisement

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 

Advertisement

2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கி பல்வேறு மைதானங்களில்  நடைபெற்று வருகிறது. இதுவரை 54 லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இதில் 11 போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலிடத்தில் உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் 2வது இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் 3 வது இடத்திலும் உள்ளது.இந்நிலையில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறும் 55வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இதுவரை 10 போட்டிகளில் விளையாடி உள்ள ஹைதராபாத் அணி 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement