SRHvsLSG | டாஸ் வென்ற ஹைதராபாத் அணி - லக்னோ அணி பேட்டிங்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் லீக் சுற்று இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று(மே.19) ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ அணி, பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஹைதராபாத் அணியை எதிர்கொள்ளவுள்ளது. ஏற்கெனவே ஹைதராபாத் அணி ப்ளே ஆஃப் ரேஸில் இருந்து வெளியேறிவிட்டது. ஆனால், லக்னோ அணி இதுவரை 11 போட்டிகளில் விளையாடி பத்து புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.
இந்த நிலையில் உத்திர பிரதேச மாநிலம் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் இரு அணிகளுக்கு இடையேயான போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் டாஸை வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
ஹைதராபாத் பிளேயிங் லெவன்:
அபிஷேக் சர்மா, இஷான் கிஷான், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அனிகேத் வர்மா, கமிந்து மெண்டிஸ், பேட் கம்மின்ஸ், ஹர்ஷல் படேல், ஹர்ஷ துபே, ஜீஷான் அன்சாரி, எஷான் மலிங்கா.
லக்னோ பிளேயிங் லெவன்:
ஐடன் மார்க்ராம், மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், ரிஷப் பந்த், ஆயுஷ் படோனி, அப்துல் சமத், ஆகாஷ் தீப், அவேஷ் கான், ரவி பிஷ்னோய், திக்வேஷ் ரதி, ரூர்க்.