SRHvsGT | டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சு தேர்வு!
நடப்பாண்டு ஐபிஎல் லீக் சுற்றில் ஹைதரபாத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சு தேர்வுசெய்துள்ளது.
07:41 PM Apr 06, 2025 IST | Web Editor
Advertisement
நடப்பாண்டு ஐபிஎல் லீக் சுற்றில் இன்று(ஏப்ரல்.06) பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஹைதரபாத் அணி ஷுப்பன் கில் தலைமையிலான குஜராத் அணியை எதிர்கொள்கிறது. ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இப்போட்டி நடைபெறவுள்ள நிலையில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
Advertisement
ஹைதரபாத் அணியில், டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, இஷான் கிஷான், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென்(விக்கெட் கீப்பர்), அனிகேத் வர்மா , கமிந்து மெண்டிஸ், பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஜீஷான் அன்சாரி, ஜெய்தேவ் உனத்கட், முகமது ஷமி ஆகியோர் விளையாட உள்ளனர்.
அதே போல் குஜராத் அணியில், ஷுப்மான் கில், சாய் சுதர்சன் , ஜோஸ் பட்லர்,ஷாருக் கான், ராகுல் திவாத்தியா, வாஷிங்டன் சுந்தர், ரஷீத் கான், சாய் கிஷோர், முகமது சிராஜ் பிரசித் கிருஷ்ணா, இஷாந்த் சர்மா ஆகியோர் விளையாட உள்ளனர்.