SRHvsDC | டாஸ் வென்ற ஹைதரபாத் அணி பேட்டிங் தேர்வு!
18வது ஐபிஎல் நடைபெற்று வரும் நிலையில், ஞாயிற்று கிழமையான இன்று(மார்ச்.30) இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் போட்டி ஹைதரபாத் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரண்டாவது போட்டி சென்னை - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே அசாம் பர்சபரா மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் ஹைதரபாத் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி தொடங்கியிருக்கும் நிலையில், டாஸ் வென்ற ஹைதரபாத் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. ஹைதரபாத் அணியில், அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷான், நிதிஷ் குமார் ரெட்டி, அனிகேத் வர்மா, ஹென்ரிச் கிளாசென் (Wk) அபினவ் மனோகர் பேட் கம்மின்ஸ் (C), ஜீஷன் அன்சாரி ஹர்ஷல் படேல் முகமது ஷமி ஆகியோர் விளையாடி வருகின்றனர்.
டெல்லி அணியில், ஃபாஃப் டு பிளெசிஸ், ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க், அபிஷேக் போரெல், கே.எல். ராகுல்(Wk) , அக்சர் படேல்(C), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், மோஹித் சர்மா, முகேஷ் குமார் ஆகியோர் விளைடுகின்றனர்.