SRHvsDC | 7 விக்கெட் வித்தியாசத்தில் 2வது வெற்றியை பதிவு செய்த டெல்லி அணி!
18வது ஐபிஎல் நடைபெற்று வரும் நிலையில், இன்று(மார்ச்.30) ஹைதரபாத் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதரபாத் அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில், ஹைதரபாத் அணியில் அதிகபட்சமாக அனிகேத் வர்மா 74 ரன்களும், கிளாசன் 32 ரன்களும் டிராவிஸ் ஹெட் 22 ரன்களும் அடித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். 20 ஓவர் முடிவுகளில் ஹைதரபாத் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களை எடுத்தது. டெல்லி பவுலர்களில் மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். குல்தீப் யாதவ் தனது பங்கிற்கு 3 விக்கெட்டுகள் எடுத்தார்.
AxarPatel, DelhiCapitals, Mitchell Starc, PatCummins, SRHvsDC, Sunrisers Hyderabad
தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டகாரர்களாக ஃபாஃப் டு பிளெசிஸ், ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க் ஆகியோர் களமிறங்கினார், டு பிளெசிஸ் அரைசமும் ஜேக் ஃப்ரேசர் 38 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதன் பின்பு களமிறங்கிய அபிஷேக் போரெல் 34 ரன்களும், கே.எல்.ராகுல் 15 ரன்களும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 21* ரன்களும் எடுத்தனர். 16 ஓவர்களில் 7 விக்கெட் வித்தியாசத்தில் 166 ரன்கள் அடித்து, நடப்பு ஐபிஎல் தொடரில் 2வது வெற்றியை டெல்லி அணி பதிவு செய்துள்ளது.