Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆவலுடன் எதிர்பார்த்த #SquidGame சீசன் 2 வெளியானது!

02:51 PM Dec 26, 2024 IST | Web Editor
Advertisement

பிரபல தென் கொரிய தொடர் ‘ஸ்குவிட் கேம்’-ன் 2வது சீசன் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியுள்ளது.

Advertisement

நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான கொரியன் இணையத் தொடர் ‘ஸ்குவிட் கேம்’. கடனில் இருப்பவர்களிடம் பேசி ஒரு விளையாட்டை அறிமுகம் செய்கிறார்கள் சிலர். விளையாட ஒப்புக் கொள்கிறவர்களை அடையாளம் தெரியாத இடத்தில் அடைத்து வைத்து ஒரு குழு விளையாட்டை நடத்துகிறது. வெற்றி பெறுபவர்களுக்கு பெருந்தொகை வழங்கப்படும், மாறாக தோற்றால்? உடனடியாக கொல்லப்படுகிறார்கள்.

ஒரு சிறிய கதைக் கருவை வைத்து உருவாக்கப்பட்ட இத்தொடருக்கு தற்போது உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆங்கிலத்தில் வெளியாகி இந்தியாவிலும் பெரிய வெற்றியைப் பதிவு செய்த ‘ஸ்குவிட் கேம்’ தொடர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் வெளியானது. இதனையடுத்து இந்தத் தொடரின் அடுத்த சீசன் எப்போது வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

அதன்படி, ஸ்குவிட் கேம்’-ன் 2வது சீசன் விறுவிறுப்பாக உருவானது. சமீபத்தில் 2வது சீசனின் புதிய டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி வைரலானது. இந்நிலையில், ரசிகரகள் ஆவலுடன் எதிர்பார்த்த ஸ்குவிட் கேம்’-ன் 2வது சீசன் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியுள்ளது. இந்த தொடரின் 3வது சீசன் அடுத்த ஆண்டு வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
cinemaSquidGame1SquidGame2
Advertisement
Next Article