விளையாட்டு மற்றும் உடற்கல்வித் திட்டம் - சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தொடக்கம்.!
ஒருங்கிணைக்கப்பட்ட விளையாட்டு மற்றும் உடற்கல்வித் திட்டம் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைக்கப்பட்ட விளையாட்டு மற்றும் உடற்கல்வித் திட்டம் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நகரில் நடைபெற்ற நிகழ்வில் சென்னை மாநகராட்சியைச் சேர்ந்த 23 பள்ளிகளில் எல் கே ஜி முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விளையாட்டு சார்ந்த உடற்கல்வியை வழங்கும் வகையில் ஒருங்கிணைக்கப்பட்ட விளையாட்டு மற்றும் உடற்கல்வித் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த திட்டத்தினை தொடங்கி வைக்கும் நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.மோகன், கார்த்திக் மோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதன் மூலம் சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு காலை, மாலை வேளைகளில் 12,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உடற்பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இந்த நிகழ்வின் தொடக்கமாக மாணவர்களுக்கு உடற்கல்விக்கான உபகரணங்களை சட்டமன்ற உறுப்பினர் எம் கே மோகன் வழங்கினார்.