#CinemaPosters ஒட்டுவதற்கு குறிப்பிட்ட இடம் ஒதுக்க வேண்டும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் நடிகர் ஆனந்தராஜ் கோரிக்கை!
திரைப்பட போஸ்டர்கள் ஒட்டுவதற்கு குறிப்பிட்ட இடம் ஒதுக்க வேண்டும் என
நடிகர் ஆனந்தராஜ் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேபில், 'சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்' திரைப்படத்தின் டீசர் மற்றும் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 'சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்' திரைப்படத்தின் நடிகர் வைபவ், நடிகை அத்துல்யா ரவி, இசையமைப்பாளர் டி இமான் மற்றும் சகநடிகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நடிகர் அருண் விஜய் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் ஆனந்தராஜ் பேசுகையில் :
"சினிமா போஸ்டர்களை பலரும் கிழிக்கின்றனர். போஸ்டரை கிழித்த இடத்தில் கட்சி
போஸ்டர்களை ஒட்டுகின்றனர். இதை பார்க்கும் போது மனதிற்கு மிகவும் வருத்தமாக
இருக்கிறது.
இதையும் படியுங்கள் : #ChennaiMetro : தற்காலிகமாக நிறுத்தப்பட மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடக்கம்!
இதனால் போஸ்டர்கள் ஓட்டுவதற்கு செலவழிக்கப்படும் பணம் வீணாகிறது. எனவே இது
குறித்து தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சரும், எனது தம்பியுமான உதயநிதி
ஸ்டாலினிடம் ஒரு கோரிக்கை வைக்கிறேன். சினிமா போஸ்டர்களை ஒட்டுவதற்கு என்று
ஒரு தனி இடத்தை ஒதுக்க வேண்டும். உதயநிதி ஸ்டாலின் இந்தத் துறையில் இருந்ததனால் அவருக்கும் இந்த கஷ்டம் தெரியும் என்று நினைக்கிறேன்"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.