Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#SouthernRailways | தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்... #Reservation இன்று தொடக்கம்!

07:08 AM Oct 23, 2024 IST | Web Editor
Advertisement

தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து கன்னியாகுமரி, செங்கோட்டை, மங்களூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

Advertisement

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

"சென்னை சென்ட்ரலில் இருந்து கன்னியாகுமரிக்கு அக்.29, நவ.5 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் (எண்: 06001) இயக்கப்படும். சென்னை சென்ட்ரலில் இரவு 11.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மறுநாள் காலை 12.15 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். மறுமார்க்கமாக கன்னியாகுமரியில் இருந்து அக்.30, நவ.6 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2.45 மணிக்கு சிறப்பு ரயில் (எண்: 06002) இயக்கப்படும்.

இந்த ரயில் சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் வழியாக இயக்கப்படும்.

செங்கோட்டை

சென்னை சென்ட்ரலில் இருந்து செங்கோட்டைக்கு அக்.30, நவ.6 ஆகிய தேதிகளில் முழுவதும் ஏசி பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயில் (எண்: 06005) இயக்கப்படும். சென்னை சென்ட்ரலில் இரவு 7 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மறுநாள் காலை 9.20 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். மறுமார்க்கமாக செங்கோட்டையில் இருந்து அக்.31, நவ.7 ஆகிய தேதிகளில் இரவு 7.30 மணிக்கு சிறப்பு ரயில் (எண்: 06006) இயக்கப்படும்.

இந்த ரயில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி வழியாக இயக்கப்படும்.

தாம்பரம் - கன்னியாகுமரி

தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு அக்.28, நவ.4, 11ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் (எண்: 06049) இயக்கப்படும். தாம்பரத்தில் நள்ளிரவு 12.05 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் பகல் 12.15 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். மறுமார்க்கமாக கன்னியாகுமரியில் இருந்து அக்.29, நவ.5, 12 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.35 மணிக்கு சிறப்பு ரயில் (எண்: 06050) இயக்கப்படும். இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் வழியாக இயக்கப்படும்.

கேரளம்/கர்நாடகம்:

சென்னை சென்ட்ரலில் இருந்து கர்நாடக மாநிலம் மங்களூருக்கு நவ.2-ஆம் தேதி இரவு 11.50 மணிக்கு சிறப்பு ரயில் (எண்: 06037) இயக்கப்படும். மறுமார்க்கமாக மங்களூரில் இருந்து சென்னைக்கு நவ.3-ம் தேதி மாலை 6 மணிக்கு சிறப்பு ரயில் (எண்: 06038) இயக்கப்படும். இந்த ரயில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, ஷோரனூர், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு வழியாக இயக்கப்படும்.

கேரள மாநிலம் கொச்சுவேலியில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு நவ.4-ம் தேதி மாலை 6.05 மணிக்கு முன்பதிவில்லா பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயில் (எண்: 06039) இயக்கப்படும். மறுமார்க்கமாக பெங்களூரில் இருந்து நவ.5-ஆம் தேதி பகல் 12.45 மணிக்கு சிறப்பு ரயில் (எண்: 06040) இயக்கப்படும். இந்த ரயில் கொல்லம், காயன்குளம், செங்கனூர், கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக இயக்கப்படும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று (அக்.23) காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது” இவ்வாறு தெரிவித்துள்ளது.

Tags :
DiwaliSouthern Railwaysspecial trains
Advertisement
Next Article