Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கன்னியாகுமரி மற்றும் கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கம்!

09:50 PM Feb 03, 2024 IST | Web Editor
Advertisement

ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க கன்னியாகுமரி மற்றும் கோவையில் இருந்து சென்னைக்கு இரண்டு நாட்கள் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. 

Advertisement

ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க கன்னியாகுமரி மற்றும் கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

"ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் இருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு அதிவிரைவு சிறப்பு ரயில் நாளை (பிப்.04) இயக்கப்படுகிறது.

எண்-06041 என்ற அதிவிரைவு சிறப்பு ரயில், கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் இருந்து நாளை இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு, பிப்.5-ம் தேதி காலை 9.45 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையத்தை வந்து சேரும்.  மீண்டும் அதே அதிவிரைவு ரயில் எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து பிப்.5-ம் தேதி மதியம் 1 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள்(பிப்.6) அதிகாலை 2.45 மணிக்கு கன்னியாகுமரியை சென்றடையும்.

அதேபோல்,  எண்-06043  என்ற அதிவிரைவு சிறப்பு ரயில், கோவை ரயில் நிலையத்தில் இருந்து நாளை (பிப்.04) இரவு 11:30 மணி புறப்பட்டு, பிப்.5-ம் தேதி காலை 8.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்து சேரும். மீண்டும் அதே அதிவிரைவு ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பிப்.5-ம் தேதி காலை 10.20 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 8.25 மணிக்கு கோவை சென்றடைகிறது.  இந்த ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Chennaichennai centralCoimbatoreEgmoreKanyakumarisouthern railwayspecial train
Advertisement
Next Article