Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திருச்செந்தூர் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கம்... எங்கிருந்து, எப்போது புறப்படும்?

திருச்செந்தூர் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. 
09:29 PM Jun 30, 2025 IST | Web Editor
திருச்செந்தூர் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. 
Advertisement

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இக்கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மாதம் குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. அதன்படி, இக்கோயிலில் ஜுலை 7ஆம் தேதி காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.

Advertisement

இதையும் படியுங்கள் : ரயில் கட்டண உயர்வு நாளை முதல் அமல்… எந்தெந்த ரயில்களுக்கு எவ்வளவு உயர்கிறது?

குடமுழுக்கு விழாவை முன்னிட்டு திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி, ஜூலை 7ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து காலை 9.15 மணிக்கு புறப்படும் ரயிலானது 10.50 மணிக்கு திருச்செந்தூர் சென்றடையும்.

மறுமார்க்கமாக திருச்செந்தூரில் இருந்து காலை 11.20 மணிக்கு புறப்படும் ரயிலானது திருநெல்வேலிக்கு மதியம் 12.55 மணிக்கு வந்தடையும்.  இந்த சிறப்பு ரயிலானது பாளையங்கோட்டை, செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம், நாசரேத் குரும்பூர் மற்றும் ஆறுமுகநேரி உள்ளிட்ட இடங்களில நின்று செல்லும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்து.

Tags :
festivalKumbhabhishekhammurugan templespecial trainTempleThiruchendurTrain
Advertisement
Next Article