ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக முருகன் கோவிலில் சிறப்பு பூஜை!
02:19 PM Dec 31, 2024 IST | Web Editor
Advertisement
திருவள்ளூர் மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக முருகன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
Advertisement
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயில் ஆகும். இந்த திருக்கோயிலில் வருடத்தின் கடைசி நாள் ஆன இன்று(டிச;31) ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக திருப்புகழ் திருப்படித் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
மேலும் மலைக்கோவிலில் முருகப்பெருமான் வெள்ளி தேரில் வள்ளி தெய்வானை மற்றும் தாயாருடன் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் எழுந்தருளினார். திருக்கோயில் மாட வீதியில் முருகப்பெருமான் ஒரு சுற்று வளம் வந்து பக்தர்களுக்கு அருள் வழங்கினார். அரோகரா அரோகரா என்று பக்தர்கள் பக்தி முழக்கம் சாமி தரிசனம் செய்தனர்.