Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்” - #EPS வலியுறுத்தல்!

12:26 PM Oct 28, 2024 IST | Web Editor
Advertisement

“உடனடியாக கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்” என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;

கரும்பு டன் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.4000 வழங்கப்படும் என்று சட்டமன்ற பொதுத் தேர்தலின் போது வாக்குறுதி அளித்து, ஆட்சியைப் பிடித்து 41 மாதங்கள் கடந்த நிலையில், 2023-24ம் ஆண்டில் கரும்பு சப்ளை செய்த அனைத்து விவசாயிகளுக்கும் சிறப்பு ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூபாய் 215 வழங்கப்படும் என்று சட்டமன்றத்தில் வேளாண்மை துறை அமைச்சர் அறிவித்தார்.

https://twitter.com/EPSTamilNadu/status/1850777474382319924?t=1y0nP_zAVL5QUnDCUbiV-Q&s=09

அதையே உறுதி செய்து தீபாவளிக்கு முன்பு அனைத்து கரும்பு விவசாயிகளுக்கும், இத்தொகை வழங்கப்படும் என்று அரசின் சார்பில் செய்தி குறிப்பும் வெளியிடப்பட்டது. ஆனால் இன்று வரை இத்தொகை கரும்பு விவசாயிகளுக்கு வழங்குவதற்கான எந்த விதமான நடவடிக்கைகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திமுக அரசு எடுக்கவில்லை. தீபாவளிக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், ஊக்கத்தொகை கிடைக்காத கரும்பு விவசாயிகள், இந்தாண்டு தீபாவளியை வழக்கமான உற்சாகத்தில் கொண்டாட முடியாமல் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர்.

உடனடியாக கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
ADMKCMO TamilNaduedappadi palaniswamiIncentiveMK Stalinsugarcane farmers
Advertisement
Next Article