Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மாமல்லபுரத்தில் நாளை சிறப்பு பொதுக்குழு கூட்டம் - தவெக அறிவிப்பு!

மாமல்லபுரத்தில் நாளை சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று தவெக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
01:30 PM Nov 04, 2025 IST | Web Editor
மாமல்லபுரத்தில் நாளை சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று தவெக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Advertisement

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தொடர்ந்து சட்டசபை தேர்தலை சந்திக்க தமிழக வெற்றிக் கழகம் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் கட்சிக்கு புதிய நிர்வாகிகளை தவெக தலைவர் விஜய் அறிவித்திருந்தார். மேலும், கட்சியின் அடுத்த கட்ட நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க மாமல்லபுரத்தில் நாளை சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று தவெக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Advertisement

இந்நிலையில், இந்த சிறப்பு பொதுக்குழு கூட்டம் தொடர்பாக நிர்வாகிகளுக்கு தவெக முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் தலைமை நிலையம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "கழகத் தலைவர் தலைமையில், நாளை (05.11.2025, புதன்கிழமை) காலை 10.00 மணிக்கு, மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் நடைபெற உள்ள கழகச் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில், பொதுக்குழுக் கூட்டத்திற்கான அழைப்புக் கடிதம் மற்றும் தலைமைக் கழக அடையாள அட்டை வைத்திருக்கும் பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர்.

எனவே பொதுக்குழு உறுப்பினர்கள் தங்களுக்கு அனுப்பப்பட்ட அழைப்புக் கடிதம் மற்றும் கழக அடையாள அட்டையைக் கட்டாயம் தவறாமல் கொண்டுவந்து, சிறப்புப் பொதுக்குழுவில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
General MeetingkarurMamallapuramtvkvijay
Advertisement
Next Article