Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஜாபர் சாதிக்  உள்ளிட்ட 5 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய அமலாக்கத்துறைக்கு அனுமதி - டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

12:27 PM May 01, 2024 IST | Web Editor
Advertisement

ஜாபர் சாதிக்  உள்ளிட்ட 5 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

டெல்லியில் கடந்த மாதம் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த கடத்தலில் திரைப்பட தயாரிப்பாளரும், அரசியல் கட்சி பிரமுகருமான ஜாபர் சாதிக் முக்கிய பங்காற்றியது தெரிய வந்தது.

இதையடுத்து, ஜாபர் சாதிக்கை போதைப் பொருள் தடுப்புத் துறையினர் (என்சிபி) மார்ச் 9ம் தேதி கைது செய்தனர். தொடர்ந்து, ஜாபர் சாதிக்கின் கூட்டாளிகளான சதா, முகேஷ், முஜிபுர் ரகுமான், அசோக் குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

டெல்லியில் மார்ச் மாதம் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

தொடர்ந்து, கடந்த ஏப். 9-ம் தேதி ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. சாந்தோமில் உள்ள அவரது வீடு, சென்னை சாஸ்திரி நகரில் உள்ள பிரபல ஓட்டல் உரிமையாளரின் வீடு மற்றும் அலுவலகம்,  சென்னை பெரம்பூரில் ஜாபர் சாதிக்குடன் தொடர்புடைய 3 பேரின் வீடு, புரசைவாக்கத்தில் உள்ள ஒரு ஓட்டல் என்று சோதனை நடத்தப்பட்டது.

இதுதவிர, மதுரை, திருச்சி என ஜாபர் சாதிக் மற்றும் இயக்குநர் அமீர் ஆகியோருக்கு சொந்தமான வீடு, அலுவலகம் உள்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அன்றைய தினம் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜாபர் சாதிக்  உள்ளிட்ட 5 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய அனுமதி அமலாக்கத்துறை டெல்லி சிறப்பு நீதிமன்றத்திடம் அனுமதி கேட்டது. இதனைத் தொடர்ந்து மே 8, 9, 10 ஆகிய நாட்களில் திகார் சிறைக்கு சென்று வாக்குமூலத்தை பதிவு செய்ய அமலாக்கத்துறைக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

Tags :
drug caseEDEnforcement DirectorateEnforcement Directorate (ED)Jaffer Sadiq
Advertisement
Next Article