Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“காணாமல் போய்விடுவார்கள்” - பெரியார் குறித்த சர்ச்சை கருத்துகளுக்கு சபாநாயகர் அப்பாவு பதிலடி!

பெரியார் குறித்து யார் பேசினாலும் காணாமல் போய்விடுவார்கள் என சபாநாயகர் அப்பாவு பேட்டி அளித்துள்ளார்.
05:52 PM Jan 15, 2025 IST | Web Editor
Advertisement

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சபாநாயகர் அப்பாவு குளச்சல் பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது அவரிடம்  செய்தியாளர்கள் சட்டப்பேரவையில் ஆளுநர் வெளிநடப்பு மற்றும் பெரியார் பற்றி நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் சமீபத்திய கருத்து குறித்தும் கேள்வி எழுப்பினர். அதற்கு  பதிலளித்த சபாநாயகர் அப்பாவு

Advertisement

“பெரியார் குறித்து யார் பேசினாலும் அவர்கள் காணாமல் போய்விடுவார்கள், நான் சீமானை மட்டும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. முதலமைச்சர் குறித்து மிஸ்டர் என எக்ஸ் தளத்தில் ஆளுநர் பதிவிட்டு இருப்பது அவருடைய தகுதிக்கு சரியா? இது அவர் வகித்து வரும் பதவிக்கு அழகல்ல. அவர் உரையை வாசித்திருக்க வேண்டும். வாசிக்காமல் சென்றால் நாங்கள் என்ன செய்ய?” என்று பதில் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், “2023 ஆம் ஆண்டு தேசிய கீதம் பாடும்போதே ஆளுநர் நடந்து சென்று தேசிய கீதத்தை அவமதித்திருக்கிறார். இந்த விவகாரம் குறித்து எக்ஸ் வலைத்தளத்தில் அழித்து அழித்துப் பதிவு போடுகிறார். இதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆளுநருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தான் முடிவு செய்ய முடியும்” என்றார்.

Tags :
Governer RN RaviMAppavuperiyarRNRaviSeeman
Advertisement
Next Article