For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தெற்கு ரயில்வேயின் சூப்பர் அறிவிப்பு... 6 சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிப்பு!

கோடை விடுமுறையை ஒட்டி 6 வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவையை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு செய்து தெற்கு ரயில்வே அறிவிப்பு...
02:29 PM Apr 15, 2025 IST | Web Editor
தெற்கு ரயில்வேயின் சூப்பர் அறிவிப்பு    6 சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிப்பு
Advertisement

ரயில் பயணிகளின் வசதிக்காகவும், கோடைகால விடுமுறைக்காகவும் 6 வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவையை ஒரு மாதத்திற்கு நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Advertisement

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் நாகர்கோவில் - தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் மே 11 முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

வாரம்தோறும் திங்கள்கிழமை இயக்கப்படும் தாம்பரம் நாகர்கோவில் -சிறப்பு ரயில் மே 12 முதல் ஜூன் 2 ஆம் தேதி வரையிலும், வெள்ளிக்கிழமை மட்டும் செல்லும் தாம்பரம் - திருவனந்தபுரம் ரயில் மே 9 முதல் மே 30 வரையிலும்,

ஞாயிறு அன்று இயக்கப்படும் திருவனந்தபுரம் தாம்பரம் ரயில் மே 11 முதல் ஜூன் 1 வரையிலும், ஞாயிறு அன்று இயங்கும் திருநெல்வேலி -மேட்டுப்பாளையம் ரயில் சேவை மே 11 முதல் ஜூன் 1 வரையிலும், திங்கள்கிழமை இயங்கும் மேட்டுப்பாளையம் திருநெல்வேலி ரயில் சேவை மே 12 முதல் ஜூன் 2 வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 6 வாராந்திர சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

Tags :
Advertisement