Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மதுரை-சண்டிகர் ரயில் சேவையில் தாமதம் - #SouthernRailway அறிவிப்பு

08:18 PM Sep 15, 2024 IST | Web Editor
Advertisement

மதுரை - சண்டிகர் விரைவு ரயில் தாமதமாக புறப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

Advertisement

மதுரை-சண்டிகர் எக்ஸ்பிரஸ் (12687) தமிழ்நாட்டின் மதுரை சந்திப்பு மற்றும் பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் உள்ள சண்டிகர் சந்திப்புக்கு இடையே இயக்கப்படுகிறது.இந்த விரைவு ரயில் மதுரையிலிருந்து இன்றிரவு புறப்பட வேண்டிய நிலையில், 3 மணி நேரம் தாமதமாக புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகத்திருந்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : உத்தரகாண்ட் நிலச்சரிவிலிருந்து மீட்கப்பட்ட பயணிகள் எப்போது தமிழ்நாடு திரும்புகிறார்கள்? – #Tamilnadu அரசு அறிக்கை!

அதில் தெரிவித்துள்ளதாவது :

"மதுரை - சண்டீகர் விரைவு ரயிலுக்கான இணை ரயிலின் வருகை தாமதமாகியுள்ளது. இதனால், மதுரையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (செப். 15) இரவு 11.35 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை - சண்டீகர் விரைவு ரயில்(12687) இரண்டு மணி நேரம் 55 நிமிடங்கள் தாமதமாக திங்கள்கிழமை (செப். 16) அதிகாலை 2.30 மணிக்கு மதுரையிலிருந்து புறப்படும்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
announcedChandigarh Expressdelayed departureMaduraiNews7Tamilnews7TamilUpdatessouthern railway
Advertisement
Next Article