For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

‘தென்னக ரயில்வே ஆலோசனை கூட்டம்’ - கலாநிதி வீராசாமி எம்.பி பங்கேற்பு!

08:59 PM Feb 20, 2024 IST | Web Editor
‘தென்னக ரயில்வே ஆலோசனை கூட்டம்’   கலாநிதி வீராசாமி எம் பி பங்கேற்பு
Advertisement

தென்னக ரயில்வே அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி கலந்து கொண்டு தமிழ்நாடு தொடர்பாக பல கோரிக்கைகளை முன்வைத்தார்.

Advertisement

சென்னை ரயில்வே கோட்டத்தின் வளர்ச்சி நடவடிக்கை மற்றும் பயணிகள் வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக தென்னக ரயில்வே அலுவலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி கலந்து கொண்டார். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதிமாறன், கதிர் ஆனந்த், செல்வம்,  கிரிராஜன் மற்றும் தென்னக ரயில்வே அதிகாரிகள் ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில்,

  • வடசென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்தை குறைந்த குத்தகை தர வேண்டும்.
  • ஆர். கே. நகர் பகுதியில் உள்ள (IOCL)பேருந்து நிலையத்திற்கான தடையின்மை சான்றிதழ் வழங்க வேண்டும்.
  • வட சென்னையில் உள்ள அனைத்து சுரங்க பாதைகளையும் விரைவாக கட்டி முடிக்க வேண்டும்.
  • சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் செல்லும் அனைத்து ரயில்களும் திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும்.

போன்ற கோரிக்கைகளை எம்.பி. கலாநிதி வீராசாமி முன்வைத்துள்ளார்.

Tags :
Advertisement