For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கேரளாவிற்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் கண்டனம்!

08:51 PM Dec 18, 2024 IST | Web Editor
கேரளாவிற்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் கண்டனம்
Advertisement

கேரள மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டில் கொட்டப்படுவதற்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

Advertisement

கேரளாவின் மருத்துவ மற்றும் இறைச்சிக் கழிவுகள் தமிழ்நாட்டின் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கொட்டப்பட்டு வருகிறது. திருநெல்வேலி சீதபற்பநல்லூர் அருகே நடுக்கல்லூர், பழவூர் பகுதியில் நேற்று முன்தினம் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களில் கேரளாவின் மருத்துவக் கழிவுகள் மூட்டை மூட்டையாக கொட்டப்பட்டு இருந்தன. இதற்கு பெரும் கண்டனம் எழுந்த நிலையில் தமிழக-கேரளா எல்லையான புளியரை சோதனை சாவடியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கேரள மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டில் கொட்டப்படுவதற்கு தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் கண்டனம் தெரிவித்துள்ளது. கேரள மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உயர் அதிகாரிகள் நேரில் ஆஜராக தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளை அகற்றும் செலவினை கேரள மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடம் வசூலியுங்கள் என்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags :
Advertisement