#SouthAsianJuniorAthleticsChampionship | தொடர் ஓட்டப் போட்டியில் தங்கம் வென்றது இந்தியா!
தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடரின் தொடர் ஓட்டப் போட்டியில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றுள்ளது.
சென்னை நேரு விளையாட்டரங்கில், தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடர் 29ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், பூடான், இலங்கை, மாலத்தீவு, நேபால் என 7 தெற்காசிய நாடுகளில் இருந்து 174 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். 20 வயதிற்கு உட்பட்ட வீரர்கள் பங்கேற்கும் இந்த தொடரில், இந்தியாவில் இருந்து 62 பேர் பங்கேற்றனர். இதில் 9 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்.
முதல் நாள் முடிவில் 3 தங்கம் உட்பட 9 பதக்கத்தை வேட்டையாடிய இந்தியா, இரண்டாம் நாளில் மட்டும் 8 தங்கம் உட்பட 19 பதக்கங்களை வென்றது. இந்நிலையில் தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. மகளிர் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது. தங்கம் வென்ற இந்திய அணியில் தமிழ்நாடு வீராங்கனை கனிஷா டீனாவும் இடம் பெற்றுள்ளார்.