For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடிக்க போகும் K Drama! - இந்த மாதம் ஓடிடியில் வெளியீடு!

10:12 AM May 02, 2024 IST | Web Editor
ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடிக்க போகும் k drama     இந்த மாதம் ஓடிடியில் வெளியீடு
Advertisement

ரசிகர்களின் மனம் கவர்ந்த K Drama இந்த மாதம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

Advertisement

உலகளாவில் அதிக பார்வையாளர்களை கொண்ட K Drama வில் ஒவ்வொரு எபிசோட்டும் தனித்துவமான கதைக்களங்களையும்,  ஈர்க்கும் கதாபாத்திரங்களையும், பார்வையாளர்களை கவர்ந்து இழுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

K Drama க்கு பல கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.  பலராலும் ரசிக்கப்பட்டு வரும் K Drama சில தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால், K Drama ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதையும் படியுங்கள் : சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்து எரிந்த கார்… உயிர்பிழைத்த குடும்பத்தினர்!

முன்னதாக, ‘Queen of Tears’ தொடர் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் மார்ச் 9-ம் தேதி வெளியானது.  கிம் சூ ஹியுன்,  கிம் ஜி வோன்,  பார்க் சங் ஹூன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள தென்கொரிய தொடர்,  ‘Queen of Tears’. ஜங் யங் வூ, கிம் ஹீ வோன் ஆகியோர இயக்கியுள்ள இந்த தொடரை ஸ்டுடியோ ட்ராகன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த தொடரை உலகளவில் அதிகமான ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

இதையடுத்து தற்போது K Drama சில இந்த மாதம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.  நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரவிருக்கும் K Drama  , காதல், அதிரடி, மர்மம் நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மே 2024 நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள K Drama பட்டியல்: 

  1. The Midnight Romance in Hagwon

காதல் தென் கொரிய நாடகமான "தி மிட்நைட் ரொமான்ஸ் இன் ஹாக்வோன்" ஜங் ரியோ-வோன் மற்றும் வி ஹா-ஜூன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில்  நடித்துள்ளனர்.

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள தேதி : மே 11, 2024

OTT தளம் : விக்கி

2. The 8 show

ரியூ ஜுன்-யோல், சுன் வூ-ஹீ மற்றும் "ஹெல்பௌண்ட்" மற்றும் பார்க் ஜங்-மின் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தில்  எட்டு கதாபாத்திரங்கள்  இடம் பெற்றுள்ளன. இதில் ரியாலிட்டி கேம் ஷோவை பற்றி படமாகப்பட்டுள்ளது.

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள தேதி : மே 17. 2024

OTT தளம் : நெட்ஃபிக்ஸ்

3. Frankly Speaking

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள தேதி : மே 1, 2024

OTT தளம் : நெட்ஃபிக்ஸ்

இது ஒரு காதல் மற்றும் நகைச்சுவையான திரைப்படம் ஆகும். இதில் கோ கியுங் போ, காங் ஹன் நா, ஜூ ஜாங் ஹியூக், ஷின் ஜங் கியூன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

4. The Atypical family

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள தேதி : மே 4. 2024

OTT தளம் : நெட்ஃபிக்ஸ்

இந்த நாடகத்தில்  ஜாங் கி யோங், சுன் வூ ஹீ, கோ டூ ஷிம், கிம் சு ஹியூன், பார்க் சோ யி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். The Atypical family என்பது ஒரு குடும்பத்தின் வாழ்க்கை முறை மற்றும் காதலை ஆராயும் நாடகம்.

Tags :
Advertisement