For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஈரோடு தென்னக காசி பைரவர் கோயில் தேய்பிறை அஷ்டமி பூஜை.. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

08:16 AM Mar 04, 2024 IST | Web Editor
ஈரோடு தென்னக காசி பைரவர் கோயில் தேய்பிறை அஷ்டமி பூஜை   திரளான பக்தர்கள் பங்கேற்பு
Advertisement

தென்னக காசி பைரவர் கோயிலில் நடைபெற்ற தேய்பிறை அஷ்டமி பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.

Advertisement

ஈரோடு மாவட்டம், அவல்பூந்துறை அருகே ராட்டை சுற்றிப்பாளையத்தில் தென்னக காசி
பைரவர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் நுழைவு வாசலில் 39 அடி உயரமும், 18 அடி அகலமும் கொண்ட உலகிலேயே மிக உயரமான பைரவர் சிலை அமைந்துள்ளது.  இந்த கோயிலில் மூலவராக உள்ள சொர்ணலிங்க பைரவருக்கு பக்தர்களே பூஜைகள் செய்யலாம் என்பது தனிச்சிறப்பு. தேய்பிறை அஷ்டமி தினம் கால பைரவருக்கு உகந்த தினமாக கருதப்படுகிறது.

இதனை முன்னிட்டு பைரவ பீடத்தின் ஆன்மீக குரு ஸ்ரீ விஜய் சுவாமிகள் தலைமையில் பைரவருக்கு நேற்று பாலாபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து பக்தர்கள் பைரவருக்கும், ஸ்வர்ணலிங்கத்திற்கும் பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
முன்னதாக கோயிலின் முன்பு உள்ள பைரவர் சிலைக்கு பக்தர்கள் பூசணிக்காயில்
விளக்கு ஏற்றி வழிபட்டனர்.

இவ்விழாவில் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த அஷ்டமி பூஜையை முன்னிட்டு ஈரோடு- பழனி செல்லும் சாலையில் போக்குவரத்து இடையூறு ஏற்படாத வகையில் அரச்சலூர் போலீசார் ஏற்பாடு செய்திருந்தனர்.

Tags :
Advertisement