For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் நிறைவு - 21 தங்கங்களுடன் #India முதலிடம்!

09:37 PM Sep 13, 2024 IST | Web Editor
தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் நிறைவு   21 தங்கங்களுடன்  india முதலிடம்
Advertisement

தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் நிறைவடைந்த நிலையில் இந்தியா 21 தங்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது.

Advertisement

தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் நிறைவு - 21 தங்கங்களுடன் #India முதலிடம்!

சென்னை நேரு விளையாட்டரங்கில் தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடர் 29ஆண்டுகளுக்கு பிறகு களைகட்டி வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், பூடான், இலங்கை, மாலத்தீவு, நேபால் என 7 தெற்காசிய நாடுகளில் இருந்து 174 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

மூன்று நாட்கள் நடைபெற்று வந்த நிலையில் இன்றுடன் இந்தப் போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இத்தொடரில், இந்தியா 21 தங்கம், 22 வெள்ளி, 5 வெண்கலம் என 48 பதக்கங்களுடன் முதலிடத்தையும், இலங்கை 9 தங்கம், 9 வெள்ளி, 17 வெண்கலம் என 35 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தையும் பிடித்தன.

இதேபோல இந்தியா சார்பில் 9 தமிழ்நாடு வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற நிலையில் 5 தங்கம், 2 வெள்ளி பதக்கங்களை வென்றனர். அதிலும் அபிநயா என்கிற தமிழ்நாட்டு வீராங்கனை 2 தங்கப்பதக்கங்களை தன்வசமாக்கினார்.

Tags :
Advertisement