டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங் தேர்வு - PINK நிற ஜெர்சியில் களமிறங்கும் தெ.ஆப்பிரிக்க வீரர்கள்.!
இந்தியா- தென்னாப்பிரிக்கா இடயேயான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. முதலில் களமிறங்கும் தென்னாப்பிரிக்க வீரர்கள் PINK நிற ஜெர்சியில் களமிறங்குகிறார்கள்.
இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 T20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே நடந்த டி20 தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன. இந்தியா, தென்னாப்பிரிக்கா மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை தொடங்குகிறது.
அந்த வகையில் முதலில் டி20 தொடர் முடிந்தது, அதை சமன் செய்தது இந்தியா. இதன் தொடர்ச்சியாக 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று வாண்டரர்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.
கே.எல். ராகுல் தலைமையில் ஒருநாள் அணி களமிறங்குகிறது. கடைசியாக சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை 243 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்து இந்தியா.
- ருத்ராஜ் கெயிக்வாட்
- சாய் சுதர்சன்
- திலக் வர்மா
- ரஜத் படிதார்
- ரிங்கு சிங்
- ஸ்ரேயாஸ் அய்யர்
- கே.எல்.ராகுல் (கேப்டன்)
- சஞ்சு சாம்சன்
- அக்சர் படேல்
- வாஷிங்டன் சுந்தர்
- குல்தீப் யாதவ்
- சஹல்
- முகேஷ் குமார்
- ஆவேஷ் கான்
- அர்ஷ்தீப் சிங்
- ஆகாஷ் தீப்
இந்த நிலையில் இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கும் தென்னாப்பிரிக்கா அணி மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை முன்னெடுத்து, பிங்க் நிற ஜெர்சியில் களமிறங்குவது குறிப்பிடத்தக்கது.