தென்னாப்பிரிக்கா Vs நியூசிலாந்து - வரலாற்று சாதனை படைத்த நியூசிலாந்து அணி!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் வெற்றி பெற்று நியூசிலாந்து அணி சாதனை படைத்துள்ளது.
தென்னாப்பிரிக்கா அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாவது மற்றும் கடைசி போட்டி பிப்.13ம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி, தனது முதல் இன்னிங்ஸ்களில் 242 ரன்கள் எடுத்தது. அதனைத்தொடர்ந்து களம் இறங்கி நியூசிலாந்து அணி 211 எடுத்து நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது.
இதையும் படியுங்கள் : வட்டாட்சியரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கு | மு.க.அழகிரி உள்ளிட்ட 17 பேர் விடுதலை...
இதையடுத்து, இரண்டாவது இன்னிங்ஸ்களில் முதலில் களம் இறங்கிய தென்னாப்பிரிக்க அணி, 235 ரன்களை அடித்தது. இரண்டாவது இன்னிங்ஸ்களில் நியூசிலாந்து அணிக்கு 267 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து, விளையாடிய நியூசிலாந்து அணி 7 விக்கெட விதியாகத்தில், 269 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் போட்டியை நடத்தும் நியூசிலாந்து அணி 2-0 என தொடரை கைப்பற்றியது. முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சனின் அதிரடி பேட்டிங்கால் நியூசிலாந்து அணி 2-வது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 92 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக நியூசிலாந்து வென்றுள்ளது.