For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#SAvsBAN டெஸ்ட் தொடர் | டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு!

08:34 AM Oct 02, 2024 IST | Web Editor
 savsban டெஸ்ட் தொடர்   டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு
Advertisement

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி, இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் அக்டோபர் 21ம் தேதி தொடங்க உள்ளது. இது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்தத் தொடருக்கான முதல் போட்டி வங்கதேச தலைநகர் டாக்காவிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி சட்டோகிராமிலும் நடைபெறவுள்ளது.

இதையும் படியுங்கள் : VCK மது ஒழிப்பு மாநாடு | உளுந்தூர்பேட்டையில் இன்று நடைபெறுகிறது!

இந்நிலையில், இந்தத் தொடருக்கான 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.டெம்பா பவுமா தலைமையிலான அந்த அணியில் நீண்ட நாட்கள் கழித்து செனுரன் முத்துசாமி இடம்பிடித்துள்ளார். செனுரன் முத்துசாமி கடைசியாக 2023-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் அணியில் இடம்பெற்றிருந்தார். அதன் பின்னர் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார்.

தென்னாப்பிரிக்கா டெஸ்ட் அணி:

டெம்பா பவுமா (கேப்டன்), டேவிட் பெடிங்ஹாம், மேத்யூ ப்ரீட்ஸ்கே, நான்ட்ரே பர்கர், டோனி டி ஜோர்ஜி, கேசவ் மஹராஜ், எய்டன் மார்க்ரம், வியான் முல்டர், செனுரன் முத்துசாமி, டேன் பேட்டர்சன், டேன் பீட், ககிசோ ரபாடா, ரியான் ஆர் ஸ்டப்ஸ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வெரினே ஆகியோர் தென்னாப்பிரிக்கா அணியில் இடம் பெற்றுள்ளனர்.

Tags :
Advertisement