For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சோத்துப்பாறை அணை நிரம்பியதால் இறுதிகட்ட வெள்ள அபாய எச்சரிக்கை!

09:31 AM May 21, 2024 IST | Web Editor
சோத்துப்பாறை அணை நிரம்பியதால் இறுதிகட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
Advertisement

சோத்துப்பாறை அணை அதன் முழு கொள்ளளவை எட்டிய நிலையில்,  2-வது மற்றும் இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

தேனி மாவட்டம்,  பெரியகுளத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலை அருகே சோத்துப்பாறை அணை அமைந்துள்ளது.  இந்த அணை, பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது.  இதன் மூலம் 2,865 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

கடந்த 3 மாதங்களுக்கு மேலாக மழை பொழிவு இல்லாத நிலையில்,  அணைக்கு நீர்வரத்து முற்றிலும் இல்லாமல் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைய தொடங்கியது.  இந்தநிலையில் கடந்த சில நாட்களாக சோத்துப்பாறை அணை மற்றும் மஞ்சளார் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கோடை மழையால் அணைக்கு நீர் வரத்து துவங்கி அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர துவங்கியது.

இந்த நிலையில், நேற்று இரவு 11 மணியளவில் சோத்துப்பாறை அணை அதன் முழு கொள்ளளவான 126.28 அடியை எட்டியது.  அணைக்கு வரும் 49. 63 கன அடி நீர் உபரி நீர்
அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.  தற்போது சோத்துப்பாறை அணை நிரம்பி வழிவதால் பெரியகுளம்,  வடுகபட்டி,  மேல்மங்கலம்,  ஜெயமங்களம்,  உள்ளபுரம் உள்ளிட்ட  நதி கரையோர கிராம மக்களுக்கு நீர்வளத் துறையினர் இரண்டாம் மற்றும் இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  மேலும் ஆற்று நீரில் குளிக்கவும் ஆற்றைக் கடக்கவும் கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

Tags :
Advertisement