For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

‘சூது கவ்வும் 2’ படத்தின் முதல் பாடல் வெளியானது!

08:31 PM Mar 29, 2024 IST | Web Editor
‘சூது கவ்வும் 2’ படத்தின் முதல் பாடல் வெளியானது
Advertisement

ஆர்ஜூன் இயக்கத்தில் நடிகர் மிர்சி சிவா நடித்துள்ள சூது கவ்வும் 2 - நாடும் நாட்டு மக்களும் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

Advertisement

நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து 2013-ம் ஆண்டு வெளியான படம், ‘சூது கவ்வும்’. இப்படத்தில் பாபி சிம்ஹா, சஞ்சிதா ஷெட்டி, அசோக் செல்வன், ரமேஷ் திலக், கருணாகரன், முனீஸ்காந்த் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இதனைத்தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.

சூது கவ்வும் 2 - நாடும் நாட்டு மக்களும் என்று தலைப்பிடப்பட்டுள்ள இரண்டாம் பாகத்தில் நடிகர் மிர்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ளார். சி.வி.குமார் தயாரித்துள்ள இந்த படத்தில் கருணாகரன், ரமேஷ் திலக், ராதா ரவி உட்பட பலர் நடித்துள்ளனர். இயக்குநர் அர்ஜூன் இப்படத்தை இயக்கியுள்ளார். ஜாலியான கேங்க்ஸ்டர் ஜேனரில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான ‘வீ ஆர் தி நாட் சேம்’ என்ற பாடல் வெளியாகியுள்ளது.

Tags :
Advertisement