For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சொமேட்டா நிறுவனத்தின் பயன்பாட்டுக் கட்டணம் திடீர் உயர்வு! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

02:32 PM Apr 22, 2024 IST | Web Editor
சொமேட்டா நிறுவனத்தின் பயன்பாட்டுக் கட்டணம் திடீர் உயர்வு  வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
Advertisement

சொமேட்டா நிறுவனத்தின் பயன்பாட்டுக் கட்டணம் 25 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.  

Advertisement

உணவு விநியோகிப்பதில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான சொமேட்டோ,  சைவ உணவு பிரியர்களை கவரும் வகையில் சைவ உணவுகளை ஆர்டர் செய்பவர்களுக்கு,  சைவ உணவுகளை மட்டுமே விநியோகிக்கும் பணியாளர்கள் மற்றும் உணவுப் பைகளை பயன்படுத்த முடிவு செய்து சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டது.  இந்த தனித்துவ ஊழியர்கள் வழக்கமான சிகப்பு நிறத்திலான ஆடை மற்றும் பைக்கு பதிலாக,  பச்சை நிறை டி ஷர்ட் மற்றும் பையை பயன்படுத்துவதாகவும் அறிவிக்கப்பட்டது.

இதற்கு சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.  சில நடைமுறைச் சிக்கல்களைச் சுட்டிக்காட்டி விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.  மேலும்,  பலரும் தாங்கள் சொமேட்டோ ஆப்பை தங்கள் கைப்பேசியில் இருந்து நீக்கி அதனை ஸ்க்ரீன்ஷாட் செய்து சமூகவலை தளங்களில் பகிரத் தொடங்கினர்.  இதனைத் தொடர்ந்து,  சொமேட்டோ நிறுவனம் இச்சேவையை திரும்பப் பெருவதாக அறிவித்தது.

இதனையடுத்து,  சொமேட்டா நிறுவனம் பார்ட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு பெரிய ஆர்டர்களை வழங்கும் வகையில் புதிய சேவையை தொடங்கியது.  இதனை சொமேட்டோ நிறுவனத்தின் சிஇஓ தீபீந்தர் கோயல் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்த நிலையில்,  சொமேட்டோவில் பயன்பாட்டுக் கட்டணம் 25 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.  இது ஏப்ரல் 20ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

அதன்படி, ஒரு உணவு டெலிவரி ஆர்டருக்கு 5 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது முன்னதாக 4 ரூபாயாக இருந்தது.  ஏற்கனவே,  ஜனவரி மாதம் ரூ.3 ஆக இருந்த வாடிக்கையாளர்களுக்கான கட்டணம் ரூ.4 ஆக உயர்த்தப்பட்டது.  இந்த கட்டண உயர்வு,  செமேட்டோவின் கோல்டு உறுப்பினர்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement