For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கோடை காலத்தில் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க சில வழிகள்!

05:13 PM Apr 24, 2024 IST | Web Editor
கோடை காலத்தில் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க சில வழிகள்
Advertisement

கோடை காலத்தில் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்கும் சில வழிகளை இங்கு காணலாம்.

Advertisement

கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைகிறது.  வெயிலினால் வியர்வை,  நீரிழப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.  மிக அதிகமான வெப்பத்தை உடலால் தாங்க முடியாமல் போகும் போது ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படுகிறது.

வாந்தி மற்றும் குமட்டல்,  வலிப்பு,  வேகமாக மூச்சுவிடுவது,  மயக்கம், குழப்பம்,  அதிக வியர்வை மற்றும் மூச்சுத்திணறல்,  வியர்வை இல்லாமல் வறண்ட சருமம்,  இதயப்படபடப்பு போன்றவை இதற்கான அறிகுறிகள்.  இந்நோயால் சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கோடை காலத்தில் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க சில வழிகள்:

  • தாகம் இல்லாவிட்டாலும் தண்ணீர் குடியுங்கள்.
  • காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுங்கள்.
  • தேநீர்/காபி அருந்துவதைக் கட்டுப்படுத்துங்கள்.
  • வியர்வை எளிதாக வெளியேறும் வகையில் மிருதுவான,  தளர்ந்த, காற்றோட்டமான பருத்தி ஆடையை அணியுங்கள்.
  • வெளியே செல்வதை குறைத்துக் கொள்ளுங்கள்.

அதிகம் பாதிக்கப்படுபவர்கள்

  • கைக்குழந்தைகள் மற்றும் குழந்தைகள்
  •  கர்ப்பிணிகள்
  • திறந்த வெளியில் வேலை செய்பவர்கள்
  • மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள்
  • உயர் ரத்த அழுத்தம்,  இதய நோய்கள் போன்ற நோய்கள் உள்ளவர்கள்

வாந்தி மற்றும் குமட்டல்,  வலிப்பு,  வேகமாக மூச்சுவிடுவது,  மயக்கம், குழப்பம்,  அதிக வியர்வை மற்றும் மூச்சுத்திணறல்,  வியர்வை இல்லாமல் வறண்ட சருமம்,  இதயப்படபடப்பு போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக உடலை குளிர்ச்சிபடுத்த ஏதுவான உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.

அறிகுறிகள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தால்,  மருத்துவரை அணுகுங்கள்.
நீங்கள் தனியாக இருந்தால் ஆம்புலன்ஸை அழைக்கவும்.

Tags :
Advertisement