For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"ஆவினின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காக, சிலர் வேண்டுமென்றே பழைய செய்திகளை பரப்பி வருகின்றனர்." - ஆவின் நிறுவனம் செய்தி வெளியீடு!

09:32 PM Oct 19, 2024 IST | Web Editor
 ஆவினின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காக  சிலர் வேண்டுமென்றே பழைய செய்திகளை பரப்பி வருகின்றனர்     ஆவின் நிறுவனம் செய்தி வெளியீடு
Advertisement

"ஆவினின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காக, சிலர் வேண்டுமென்றே பழைய செய்திகளை பரப்பி வருவதாக ஆவின் நிறுவனம் செய்தி வெயிட்ளிடுள்ளது.

Advertisement

இது குறித்து ஆவின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

FSSAI அதிகாரிகள் கடந்த மார்ச் மாதம் தேனி மாவட்ட பால் பண்ணையை ஆய்வு செய்து சில அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டது. அதை உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட்டு பதில் விளக்கம் கொடுக்கப்பட்டது. அதற்கு பின்பு எந்த ஆய்வுக்கும் FSSAI அதிகாரிகள் தேனி பால்பண்ணைக்கு வரவில்லை.

தற்பொழுது வெளிவந்துள்ள செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. தேனி ஆவினில் பால்கோவா மற்றும் பாதாம் பவுடர் மட்டுமே வாரத்தில் ஒரு நாள் மட்டுமே தயாரிக்கப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு மற்றும் காரவகைகள் திண்டுக்கல் மற்றும் மதுரை ஆவினில் இருந்தே வருகிறது. தேனி ஆவினில் தீபாவளி இனிப்பு வகைகள் தயாரிக்கப்படுவதில்லை. ஆவினின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காக சிலர் வேண்டுமென்றே பழைய செய்திகளை பரப்பி வருகின்றனர். தரமான பொருட்களை சரியான விலையில் வழங்குவதே ஆவினின் நோக்கம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement