Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“ஜிஎஸ்டி குளறுபடிகளை களைவதற்கான தீர்வு திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெறும்!” - கனிமொழி எம்.பி

04:08 PM Feb 10, 2024 IST | Web Editor
Advertisement

கோவை மக்கள் ஜிஎஸ்டி-யில் உள்ள குளறுபடிகள் குறித்து அதிகமாக கோரிக்கைகள் முன்வைத்துள்ளனர். இவ்விவகாரத்திற்கான தீர்வு திமுகவின் தேர்தல் அறிக்கையில் நிச்சயம் இடம்பெறும் என நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை குழு தலைவரும் திமுக துணை பொது செயலாளருமான கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார். 

Advertisement

கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் விடுதியில் கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கை குழு முதலமைச்சர் கட்டளைக்கிணங்க பல்வேறு இடங்களில் உள்ள மக்களின் கருத்துக்கள் மற்றும் விவசாயிகள், தொழில்துறையினர் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கருத்துக்களை கேட்டு தேர்தல் அறிக்கை தயார் செய்து வருகிறோம்.  மக்களும் அவர்களின் கோரிக்கைகளை தொடர்ந்து கொடுத்து வருகிறார்கள்.

மீதமுள்ள பகுதிகளில் கோரிக்கைகளை பெற்று,  முதலமைச்சரிடம் சமர்ப்பிக்க உள்ளோம்.  முதலமைச்சரிடம் கலந்து ஆலோசித்து தேர்தல் அறிக்கை விரைவில் வழங்கப்படும்.  கோவையில் உள்ள தொழில் முனைவோர், தொழில் அமைப்புகள், சிறு குறு தொழில் செய்பவர்கள் ஏற்கனவே பணம் மதிப்பிழப்பு காலத்தில் தொடங்கி, கொரோனா பாதிப்பு,  ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

ஜி எஸ் டி - யை  செலுத்தாதவர்களால் ஜிஎஸ்டி யை செலுத்துபவர்கள் மீது பாரம் ஏற்றப்பட்டு தொழில் செய்ய முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுவதாக தெரிவித்து இருக்கிறார்கள்.  இந்த விவகாரத்தை நிச்சயமாக தேர்தல் அறிக்கையில் கொண்டு வந்து பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்துவோம்

கோவையில் தரப்பட்ட மனுக்களில் அதிகமாக பெறப்பட்ட மனுக்களில் ஜிஎஸ்டி தொடர்பான குழப்பங்கள் குறித்தும், தொழில் செய்பவர்களுக்கான உள்கட்டமைப்புகளை அதிக படித்தி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அதிகமாக இருந்தன.

மின் கட்டண உயர்வுக்கு செவிசாய்க்காமல் இல்லை.  பலமுறை தொழில்துறையுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது அவர்கள் முன்வைக்கக்கூடிய கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும்.

கோவைக்கு சிறப்பு திட்டங்கள் எதுவும் வழங்கப்படவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த கனிமொழி, தனக்குத் தெரிந்த வரை திமுக தேர்தல் அறிக்கைகள் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தையும் தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டுதான் வந்து கொண்டிருக்கிறோம்.

கோவைக்கு எந்த திட்டங்களும் செய்யவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. முந்தைய நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட விஷயங்களை செய்ய முடியாமல் போனதற்கு காரணம் மத்திய அரசாங்கம் தான். அவர்கள் எந்த அளவுக்கு பாரபட்சமாக நடந்து கொண்டார்கள் என அனைவருக்கும் தெரியும்.

பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கு நிதியை குறைத்துக் கொடுத்தார்கள். இதனால் உள்ள பிரச்சனைகளால் சில கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாமல் இருந்திருக்கலாம். நிச்சயமாக தேர்தல் அறிக்கைகள் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றி தான் வருகிறோம். நாளை விளையாட்டுதுறை அமைச்சர் கோவை வந்து ஆயிரம் கோடி மதிப்பிலான குடிநீர் திட்டத்தை தொடங்கி வைக்கின்றார். தொழில்துறையினருக்கு பல நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. கோவைக்கு பல்வேறு நிறுவனங்கள் வருவதற்காக முதலமைச்சர் முயற்சி மேற்கொண்டு முதலீடுகளை ஈர்த்து வருகிறார். கோவை புறக்கணிக்கப்படுகிறது என்பது நிச்சயமாக இல்லை

தொழில்துறையினரின் பிரச்சினைகளை சரி செய்வதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்குள்ள தொழில் முனைவோர்கள் அல்லது சிறுகுறு தொழில் செய்பவர்களை முதல்வர் சந்திக்காமல் இல்லை. மாவட்டம் தோறும் மருத்துவக் கல்லூரிகளை உருவாக்க வேண்டும் என்ற திட்டத்தை கொண்டு வந்தவர் கருணாநிதி. நாம் கட்டிய மருத்துவ கல்லூரிகளிலேயே நமது பிள்ளைகளை படிக்க வைக்க முடியாமல் நீட் தேர்வை கொண்டு வந்து, நமது மாணவர்கள் படிக்க முடியாமல் செய்துவிட்டனர்.

மெட்ரோவுக்கு 9 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. சாலைக்காக 300 கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. குடிநீருக்காக 790 கோடி ஒதுக்கப்பட்டு நாளை துவக்கி வைக்கப்பட உள்ளது. திமுக அறிவித்த திட்டங்கள் எத்தனையோ திட்டங்களை அதிமுகவினர் கிடப்பில் போட்டு வைத்தார்கள். கோவைக்கான கோரிக்கைகள் வந்திருக்கிறது நிச்சயமாக முதலமைச்சரிடம் கொண்டு சேர்க்கப்பட்டு நிறைவேற்றப்படும்.

Tags :
CoimbatoreDMKelection manifestoElection2024Kanimozhi Karunanidhinews7 tamilNews7 Tamil Updates
Advertisement
Next Article